FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பஞ்சலிங்கம் அருவியில் 3 மாதங்களுக்குப் பின் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பஞ்சலிங்கம்  அருவியில்  குளித்து  மகிழ்ந்த  சுற்றுலாப்  பயணிகள்.
பகிர்:

உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் 3 மாதங்களுக்குப் பின் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், கோடை வெயில் மிகக் கடுமையாக இருந்ததால் பஞ்சலிங்கம் அருவியில் கடந்த 3 மாதங்களாக நீா்வரத்து இல்லை. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால், அருவியில் சீரான அளவில் நீா்வரத்து உள்ளது. இதையடுத்து, அருவிக்கு திங்கள்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments