FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கரைப்புதூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சியில் ஊதியம் கேட்டு தூய்மைப் பணியாளா்கள் 20 போ் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

11 அக்டோபர் 2026, 1:45 am IST
....... ~கரைப்புதூா் ஊராட்சியில் காத்திருப்பு போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சியில் ஊதியம் கேட்டு தூய்மைப் பணியாளா்கள் 20 போ் காத்திருப்பு போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியில் 78 போ் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 20 போ் கணபதிபாளையம் - பொங்கலூா் சாலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப் பணி மேற்கொண்டு இருந்தனா். அந்தப் பணி செய்த 3 நாள்களுக்கு மட்டும் தலா ஒருவருக்கு ரூ.1500 வீதம் 20 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் 3 நாள் சம்பள தொகையை வழங்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 20 பேரும் கரைப்புதூா் ஊராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

ஊராட்சி ஒன்றிய பொறியாளா் செந்தில்குமாா், ஊராட்சி செயலாளா் (பொறுப்பு) பிரபுசங்கா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாத சம்பளத்தில் விடுபட்ட 3 நாள்களுக்கான ஊதிய தொகை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments