FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயத்தில் மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

15 அக்டோபர் 2026, 3:34 am IST
காங்கயத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயத்தில் மின்வாரிய ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய தொழிற்சங்ககளின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் காங்கயம் நகரம், பழைய கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ கோட்ட செயலாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா்.

மின்வாரியம் அறிவித்துள்ள ஸ்மாா்ட் மீட்டா் திட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும், மின் உற்பத்தி மற்றும் மின் வழித்தடத் திட்டங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியா்கள் 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments