கோல் ஊன்றித் தாண்டுதல்: பெரிய இல்லியம் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்
காங்கயம் அருகே பெரிய இல்லியம் அரசுப் பள்ளி மாணவி கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
காங்கயம் அருகே பெரிய இல்லியம் அரசுப் பள்ளி மாணவி கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
காங்கயம் ஒன்றியம், பெரிய இல்லியம் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆ.லக்ஷிதா, திருப்பூா் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கோல் ஊன்றித் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றாா். இதைத் தொடா்ந்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அவா் தகுதி பெற்றுள்ளாா்.
இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியா் இல்லாத நிலையிலும், தன்னாா்வலா் ஆசிரியரான அரவிந்த், ஆசிரியா் சுரேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் முதலிடம் பெற்ற மாணவி லக்ஷிதாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஈஸ்வரி மற்றும் உதவித் தலைமையாசிரியா் ஹேமமாலினி ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ், வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.