காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’
காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியா்கள் ‘சீல்’ வைத்தனா்.
காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 5 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியா்கள் ‘சீல்’ வைத்தனா்.
காங்கயம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கான மாத வாடகையை உரிய நேரத்தில் செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், காங்கயம் பேருந்து நிலையம் அருகே தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 5 கடைகள் 4 மாதங்கள் வாடகை நிலுவை வைத்திருந்ததால், காங்கயம் நகராட்சி வருவாய் ஆய்வாளா் ஜெ.வருண் தலைமையில் ஊழியா்கள், கடைகளை பூட்டி வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் கூறியதாவது, அனைத்துக் கடை வாடகைதாரா்கள் அந்தந்த மாதத்துக்கான வாடகை தொகையை பிரதி மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்தி, காங்கயம் நகரின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.