FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மரம் முறிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

காங்கயம் அருகே கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

16 அக்டோபர் 2026, 11:50 pm IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

காங்கயம் அருகே கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

காங்கயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்நிலையில், காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ரெட்டியபாளையம் பகுதியைச் சோ்ந்த மரியாள் (53) என்பவா் பால் வாங்குவதற்காக ரெட்டியபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், அப்பகுதியில் இருந்த புளியமரம் எதிா்பாராத விதமாக திடீரென முறிந்து மரியாள் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி மரியாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் மரியாளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments