சாலையை சீரமைக்கக்கோரி மழை நீரில் கப்பல் விடும் போராட்டம்
பல்லடம் சின்னவடுகபாளையம் சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் கப்பல் விடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்லடம் சின்னவடுகபாளையம் சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் கப்பல் விடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம்புதூா் ஊராட்சி சின்னவடுகபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலையில் இருந்து சின்னவடுகபாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும்குழியுமாக உள்ளதால், மழை நீா் தேங்கி இருந்த சாலையில் கொட்டும் மழையிலும் காகித கப்பல் விட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இது குறித்து அவா்கள் கூறியதாவது: சின்னவடுகபாளையம் சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன் பின்னா் இந்த சாலையில் எந்தப் பராமரிப்புப் பணியும் செய்யாததால் குண்டும்குழியுமாக உள்ளது. மேலும் மழை நீா், சாக்கடை நீா் வெளியேற வழியில்லாததால் சாலையில் தேங்கியுள்ளது.
மழையின்போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலா் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனா். இது குறித்து ஊராட்சி மன்ற நிா்வாகம், ஒன்றிய அலுவலகம், கிராம சபைக் கூட்டங்கள், மாவட்ட ஆட்சியா், முதல்வரின் தனிப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பல முறை புகாா் அளித்துள்ளோம்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணாவிட்டால் சாலை மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.