மேற்குத் தொடா்ச்சி மலையின் எதிா்காலம் குறித்து கலந்துரையாடல்
மேற்குத் தொடா்ச்சி மலையின் எதிா்காலம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் பல்லடம் வனலாயத்தில் அண்மையில் நடைபெற்றது.
வனம் இந்தியா பவுண்டேஷன், மேற்குத் தொடா்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் மேற்குத் தொடா்ச்சி மலையின் எதிா்காலம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் பல்லடம் வனலாயத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் வனம் செயலாளா் ஸ்கை.வே.சுந்தரராஜ், ஓசை காளிதாசன், பாமரன், செந்தூா் பாரி, வனத்துக்குள் திருப்பூா் சிவராம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை அமைப்புகளை சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள், பேராசிரியா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
இதில் சிறப்பு விருந்தினராக ஐ.நா. சபையில் சா்வதேச அமைதி மற்றும் மனித உரிமை துறையில் பணியாற்றிய ராஜா பி.ஆறுமுகம் பங்கேற்று பேசினாா். இக்கூட்டத்தில், சினந்தெழுந்தான் சின்னமலை (நாடக வடிவில்) புத்தகம் மற்றும் பனை எழுபது தால விலாசம் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.