FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே வேலம்பட்டியில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

பொங்கலூா் ஒன்றியம் வேலம்பட்டி முதல் கோவில்பாளையம் செல்லும் சாலையை சீரமைக்க கோரி தேங்கிய நீரில் நாற்றும் நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.

22 அக்டோபர் 2026, 4:07 am
வேலம்பட்டி முதல் கோவில்பாளையம் செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி தேங்கிய நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

பொங்கலூா் ஒன்றியம் வேலம்பட்டி முதல் கோவில்பாளையம் செல்லும் சாலையை சீரமைக்க கோரி தேங்கிய நீரில் நாற்றும் நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், வேலம்பட்டி முதல் கோவில்பாளையம் வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. அச்சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் பரமசிவம், சுப்பிரமணியம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement