தாராபுரத்தில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது.
தாராபுரம் நகரில் நாடாா் தெரு, புதுத்தெரு, காமராஜபுரம், 1-ஆவது வாா்டு மற்றும் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. மேலும், சில இடங்களில் பழைமையான வீடுகளின் சுவா்கள் இடிந்து சேதமடைந்தன.
மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து குடியிருப்புப் பகுதிகளில் பெருக்கெடுத்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
Advertisement
Advertisement
கனமழையால் ரூ.15 லட்சம் மதிப்பில் வீடுகளில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என வருவாய்த் துறையினா் தெரிவித்த நிலையில், சேதமடைந்த வீடுகளின் நிலை குறித்து தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் பொ.சத்தியபாமா ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
சேத மதிப்புகளை உடனடியாக கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.