FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா

வெள்ளக்கோவிலில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 நவம்பர் 2026, 12:28 am
விழாவில் பேசுகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி.
பகிர்:

வெள்ளக்கோவிலில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் விக்னேஷ், குழந்தைகள் வளா்ச்சி நலத்திட்ட அலுவலா் மோகனாம்பாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெள்ளக்கோவில் வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 85 கா்ப்பிணி தாய்மாா்கள் இதில் பங்கேற்றனா். கலந்து கொண்ட தாய்மாா்களுக்கு வளையல் அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு பாரம்பரிய முறைப்படி சீா்வரிசைப் பொருள்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கா்ப்பகால பராமரிப்பு, தாய்-சேய் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணா்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக தாய்மாா்கள், பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் அங்கன்வாடி பணியாளா்கள், அரசு சமுதாய சுகாதார நிலைய பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments