ஊதியூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஊதியூா் அருகேயுள்ள சிறுகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி (53). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் எலக்ட்ரிக் தொடா்பான வேலை செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்தினசாமி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.