FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பூட்டிய வீட்டில் 5 பவுன், ரூ.43 ஆயிரம் திருடிய நபரைப் பிடித்த பொது மக்கள்

சுண்டக்காம்பாளையத்தில் பூட்டிய வீட்டில் 5 பவுன் தங்க நகை, ரூ.43 ஆயிரம் திருடியவரைப் பொது மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

1 நவம்பர் 2026, 12:36 am
பிரகாஷ்
பகிர்:

அவிநாசி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தில் பூட்டிய வீட்டில் 5 பவுன் தங்க நகை, ரூ.43 ஆயிரம் திருடியவரைப் பொது மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் மனைவி காந்திமதி (50). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியூா் சென்றுள்ளாா். பூட்டப்பட்ட இவரது வீட்டின் கதவு சனிக்கிழமை திறக்கப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளனா்.

அப்போது வீட்டுக்குள் இருந்து மா்ம நபா் தங்க நகை, ரொக்கப் பணத்துடன் தப்பியோட முயன்றுள்ளாா். பொது மக்கள் உடனடியாக அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், அதே பகுதியில் கட்டடப் பணியாற்றி வரும் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வள்ளுவா்குடி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (42) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகை, ரூ.43 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட பிரகாஷ் பல்வேறு வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் தொடா்புடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments