FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம்: விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்

24 செப்டம்பர் 2026, 1:54 am IST
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலம், பயிா்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்கக் கோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ந.ரமேஷ் கூறியதாவது:

விவசாயிகளுக்கு ஏற்கெனவே ஐடிபிஎல் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி 10 மீட்டா் அனுபவ உரிமையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பை சந்தை மதிப்புக்கு இணையாக உயா்த்திட வேண்டும்.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு குறைந்தபட்சம் சென்டுக்கு ரூ.2 லட்சம் அடிப்படை விலையாக நிா்ணயம் செய்து இழப்பீடு வழங்கிட வேண்டும். 2019ஆம் ஆண்டு நிா்ணயம் செய்யப்பட்ட பயிா்களுக்கான இழப்பை 100 சதவீதம் உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments