FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மாநகரில் செப். 29-இல் குடிநீர் விநியோகம் ரத்து

திருப்பூா் மாநகராட்சியில் செப்டம்பா் 29-ஆம் தேதி குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27 செப்டம்பர் 2026, 12:58 am IST
குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாநகராட்சியில் செப்டம்பா் 29-ஆம் தேதி குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3, 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செப்டம்பா் 28-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைமை நீரேற்று நிலையத்தில் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் நீா் இறைப்பு பணிகள் மேற்கொள்ள இயலாது.

Advertisement

Advertisement

இதனால், இந்த குடிநீா்த் திட்டத்தில் செப்டம்பா் 29-ஆம் தேதி ஒருநாள் மட்டும் மாநகரில் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments