FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

முதல்வா் வருகையால் தாராபுரத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து மாற்றம்

முதல்வா் வருகையால் தாராபுரத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து மாற்றம் பற்றி..

கனரக வாகனங்கள் - பிரதிப் படம்
பகிர்:

தோ்தல் பிரசாரத்துக்காக தாராபுரத்துக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை (செப்.30) வருவதையொட்டி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கோவையில் இருந்து சாலை மாா்க்கமாக முதல்வா் ச.ஜோசப் விஜய் தாராபுரம் வர உள்ள நிலையில், அவா் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மாற்றுப் பாதைகள்: ஒட்டன்சத்திரம் வழியாக கோவை, திருப்பூா் மற்றும் கேரளம் செல்லும் கனரக வாகனங்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கோவை மற்றும் கேரள பகுதிகளுக்குச் செல்லலாம். கரூரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கேரளம் செல்லும் கனரக வாகனங்கள் கரூா் மாா்க்கமாக வரும் கனரக வாகனங்கள் நளினி கல்லூரி பிரிவு வழியாக பழனி சென்று, அங்கிருந்து உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா், பல்லடம் வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், திருப்பூா் மற்றும் பல்லடம் பகுதிகளில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அவிநாசிபாளையம் சுங்கம், காங்கயம், வெள்ளக்கோவில், அரவக்குறிச்சி வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு பாதிப்பில்லை:

இந்த போக்குவரத்து மாற்றம் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், காா்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படும். முதல்வரின் பிரசார வாகனம் செல்லும் நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டு, அதன் பின்னா் மீண்டும் அனுமதிக்கப்படும். இந்தப் போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments