வனப் பகுதிக்குள் வசிக்கும் பழங்குடியினருக்கு ரூ. 64.69 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
பென்னாகரம் வனப் பகுதி போடூர் சறுக்கல் பாறையில் வசித்து வரும் 29 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ. 64.69 லட்சம் மதிப்பிலான
பென்னாகரம் வனப் பகுதி போடூர் சறுக்கல் பாறையில் வசித்து வரும் 29 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ. 64.69 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் ஆட்சியர் சு. மலர்விழி ஆகியோர் வழங்கினர்.
இந்த வன கிராமத்துக்கு சுமார் 8 கி.மீ தொலைவுக்கு அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் நடந்து சென்று 29 குடும்பங்களைச் சேர்ந்த 102 பயனாளிகளில் 29 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 51 பேருக்கு சாதிச் சான்றிதழ்களும், 6 குடும்பத்தினருக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினர்.
தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியது: இதுவரை எவ்வித அரசு உதவிகளையும் பெறாமல் இருந்த போடூர் பகுதியில் தலா ரூ. 2.10 லட்சத்தில் பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படவுள்ளன. முறையாக கல்வி பயில வசதிகள் செய்துத் தரப்படும் என்றார்.
முன்னதாக 29 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், தலையணை, போர்வை உள்ளட்ட பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், சார் ஆட்சியர் ம.ப. சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.