FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
தருமபுரியில்  மத்திய, மாநில  ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வூதியர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜி.பி.விஜயன் வரவேற்றார். 
மாநிலத்துணைத் தலைவர் ஆர். ஜோதி, போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில இணைச் செயலர் கே.குப்புசாமி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாநிலச் செயலர் எச்.கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இவ் விழாவில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கேற்ப, ஓய்வூதியத்தை வருமான வரிச் சட்டத்தில் இணைக்கக் கூடாது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2015-க்கு முன்பு, மின்வாரியத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வைரவிழா சலுகையை வழங்க வேண்டும். அதேபோல, 2018 மார்ச் மாதத்துக்கு பின்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக் கால பலன்களை வழங்க வேண்டும். 
புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை போக்குவரத்துத் துறைக்கும் அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியத்தை திருத்தியமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments