FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லாரி மீது கார் மோதியதில் இளைஞர் பலி

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பன்சவாடி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (38). வாகனங்களை வாடகைக்கு விடுவது மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துவிடும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பெங்களூருவிலிருந்து தனது காரில் பணி நிமித்தமாக சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புறவடை பகுதியில் சீனிவாசன் ஓட்டிவந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்றுக் கொண்டிருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமுற்ற அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து, விபத்தில் உயிரிழந்த சீனிவாசனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு சீனிவாசனின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments