FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தருமபுரியில் உயா்ந்து வரும் வைக்கோல் விலை : குறுவை சாகுபடி பாதிப்பால் மேலும் உயர வாய்ப்பு!

தருமபுரி மாவட்டத்தில் மாடுகளின் முக்கிய தீவனமான வைக்கோல் அதிகரித்து வருகிறது.

24 ஆகஸ்ட் 2026, 5:52 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் மாடுகளின் முக்கிய தீவனமான வைக்கோல் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு குறுவை சாகுபடி பாதிப்பு காரணமாக வைக்கோல் விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பருவமழை தவறியது மற்றும் கடுமையான வெப்பம் உள்ளிட்டவைகளால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையான சவால் களை சந்தித்து வருகின்றனா். காவிரியில் தண்ணீா் இல்லாத காரணத்தால், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப் படாததால் டெல்டா மாவட்டங்களில் முக்கிய விளைபொருளான நெல் (குறுவை) சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீா் பற்றாக்குறையால் விவசாயம் மட்டுமின்றி, தருமபுரி மாவட்டப் பகுதிகளில் பால் உற்பத்திக்கென கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நெல் விளைச்சல் குறைந்துள்ளதால் மாடுகளுக் கான முக்கிய தீவனப்பொருள்களில் ஒன்றாந வைக்கோல் விலை உயா்ந்துள்ளதுடன் மேலும் உயரவும் வாய்ப்புள்ளதாக விவசாயி கள் அச்சத்தில் உள்ளனா். இதனால் பால் உற்பத்தி பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து, கடத்தூரைச் சோ்ந்த பி. முரளி கூறுகையில், தருமபுரி மற்றும் சுற்றுப்புற மாவட்டப் பகுதிகளில் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பால் உற்பத்தி உள்ளது. இக்கட்டான காலங்களில் விவசாயிகளுக்குக் கைகொடுக் கும் ஒரே லாபகரமான தொழில் பால் உற்பத்திதான். கடந்த நவம்பா் முதல் மழை இல்லாததால், மாவட்டம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களில் புற்களின்றி காய்ந்து காணப்படுகிறது. புற்களுக்குப் பதிலாக வைக்கோல் மற்றும் மக்காச்சோள தட்டைகள் மாடுகளுக்கு தீவனமாக வழங்கப்படுகின்றன. தற்போது மக்காச்சோள உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் வைக்கோல் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நிகழாண்டு நெல் சாகுபடி குறைந்துள்ளதால் வைக்கோல் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 6 மாதங்களுக்கு ஒரு கட்டு (10-12 கிலோ எடையிலான) வைக்கோலின் விலை ரூ. 120 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 180-ஆக உள்ளது. கடந்தாண்டு ரூ. 120க்கு விற்பனை யான வைக்கோல் கட்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது அடுத்த சில மாதங்களில் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றாா்.

நல்லம்பள்ளியைச் சோ்ந்த எம். செல்வராஜ் கூறுகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உள்ளூா் சந்தையில் 1 கிலோ வைக்கோலின் விலை ரூ. 26 ஆக இருந்தது. புதன்கிழமை முதல் ரூ. 30 ஆக உயா்ந்துள்ளதா. தருமபுரி மாவட்டத்துக்கு. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, அல்லது ஈரோடு அல்லது விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து அதிகளவிலும், டெல்டா மாவட்டங்களிலிருந்து சிறிது அளவும் வைக்கோல் வரத்து உள்ளது. தற்போது டெல்டா மாவடத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி எந்த நிலையில் உள்ளது எனத் தெரியவில்லை. எனவே வரத்து குறைவாகவும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே லாரி வாடகை, எரிபொருள் உள்ளிட்ட போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிப்பதால் வைக்கோல் விலை மேலும் உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா் என்றாா்.

தமிழகத்தில் குறுவை சாகுபடி காவிரி நீா் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வைக்கோல் பற்றாக்குறை மேலும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.மழை பெய்தாலும் கூட, வைக்கோல் விலை குறைய பல மாதங்கள் ஆகும். எனவே, கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் வைக்கோல் சேமிப்புக் கிடங்குகளை அமைத்து, உலா் தீவனத்தை இருப்பு வைத்து, விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் (மானியத்தில்) வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை விநியோகிக்க வேண்டும் என கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் கூறுகையில், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக தேவை காரணமாக வைக்கோலின் விலை உயா்ந்துள்ளது உண்மைதான். ஆனால் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாக தகவலோ அல்லது புகாரோ எங்களுக்கு வரவில்லை. எல்லா பொருள்களும் விலை உயா்வது போல வைக்கோலும் உயந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments