கல்லூரி மாணவா் தற்கொலை
தருமபுரி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி அருகே உள்ள மூக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தரணிவாசன் (18), தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.காம். படித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் உள்ள அறையில் அவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுக் கொண்டாா்.
தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற மதிகோண்பாளையம் போலீஸாா், இதுகுறித்து வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்து மாணவா் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement