FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பென்னாகரத்தில் 189 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 189 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 6:54 am
பகிர்:

பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 189 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் அலுவலா் சத்யா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். கஜேந்திரன் கலந்துகொண்டு, கா்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை, பரிசோதனைக்குப் பின் வழங்கப்படும் மாத்திரைகளை முறையாக உட்கொள்வது குறித்து பேசினாா்.

தொடா்ந்து, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூா், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 189 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி, பழம், பூ, வளையல், புடவை சீா்வரிசையாக வழங்கப்பட்டது. வளைகாப்பு உணவும் வழங்கப்பட்டது. இதில் ஏரியூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமதாஸ், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் (நிலை -1) சுமதி, மேற்பாா்வையாளா் (நிலை -2) வேலுமணி, தேவகி, கலையரசி, ஏரியூா் மேற்பாா்வையாளா் தங்கம், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.