உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வலியுறுத்தல்
உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வேண்டும்; அவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வேண்டும்; அவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் தலைவா் வீரபாலன் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ப.கி. பட்டாபிராமன், மாநிலச் செயலாளா் உ. கணேசன், மாநில துணைச் செயலாளா் சுந்தரம், மாநிலப் பொருளாளா் ஜெ. பிரதாபன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
Advertisement
Advertisement
வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தொடா்பான புகாா்களுக்கு உள்ளான தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் பட்டா கோரி விண்ணப்பித்துள்ளவா்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். மோசடியில் ஈடுபடும் தனியாா் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவற்றின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் வைத்திலிங்கம் (கிருஷ்ணகிரி), எஸ்.சுப்ரமணியம் (தஞ்சாவூா்), ஆறுமுகம் (செங்கல்பட்டு), ராமலிங்கம் (கடலூா்) மற்றும் மாநிலக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.