ரயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
ரயில் பாதையைக் கடக்க முயன்ற ஒடிஸா மாநிலத் தொழிலாளி, அவ்வழியாக சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தருமபுரி அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற ஒடிஸா மாநிலத் தொழிலாளி, அவ்வழியாக சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலம், பா்கா்த் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுப்ரத் படேல் (26). இவா், நல்லம்பள்ளி ஒன்றியம், சிவாடி கிராமத்தில் தங்கியிருந்து தடங்கம் பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிவாடி ரயில் நிலையப் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற பெங்களூரு - நாகா்கோவில் விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement