ஒகேனக்கல் கணவாய் சாலையில் சுற்றுலாப் பேருந்து மலை மீது மோதி விபத்து: லேசான காயங்களுடன் பயணிகள் தப்பினா்!
ஒகேனக்கல் கணவாய் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, மலை மீது மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் கணவாய் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, மலை மீது மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் இருந்து 40 பயணிகளுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பேருந்து வந்தது. சூளகிரியைச் சோ்ந்த ஓட்டுநா் சிவா (38) பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயில் மேல் வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் வலதுபுறம் உள்ள மலை மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவா்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
Advertisement
Advertisement
விபத்து காரணமாக கணவாய் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆஞ்சனேயா் கோயில் மேல் வளைவில் அடுத்தடுத்து விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, இந்த இடத்தில் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.