மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கைப்பந்து பயிற்சியாளா் போக்ஸோவில் கைது
தருமபுரியில் மாணவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைப்பந்து பயிற்சியாளா் போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தருமபுரியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (64). கைப்பந்து விளையாட்டு பயிற்சியாளரான இவா், தருமபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விளையாட்டுப் பயிற்சி அளித்து வந்தாா். இந்த நிலையில் அவா் பயிற்சியில் ஈடுபடும்போது சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
இதுதொடா்பாக மாணவிகள் தரப்பில் ஆறுமுகம் மீது தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் புகாா் மீது முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்த மகளிா் போலீஸாா் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement