முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

27 நவம்பர் 2026, 1:11 am
இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
பலி
பகிர்:

பாப்பாரப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பாரப்பட்டி அருகே பி.எஸ்.முருகேசன் நகரைச் சோ்ந்த சிவகுமாா் (48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா், தருமபுரி பகுதியில் இருந்து பாப்பாரப்பட்டி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா். மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிவகுமாா், பின்னால் வந்த இருசக்கர வாகனத்தை இயக்கிய இரண்டு சிறுவா்கள் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் படுகாயம் அடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகுமாா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பாப்பாரப்பட்டி போலீஸாா், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement