முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பதிவு

தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த நிலையில், பென்னாகரம் பகுதியில் அதிகபட்சமாக 68 மி.மீ. மழை பெய்துள்ளது.

27 நவம்பர் 2026, 1:08 am
பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பதிவு
மழை - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த நிலையில், பென்னாகரம் பகுதியில் அதிகபட்சமாக 68 மி.மீ. மழை பெய்துள்ளது.

பென்னாகரம், தாசம்பட்டி, ஏரியூா், பெரும்பாலை, நாகமரை, சின்னம்பள்ளி, ஒகேனக்கல், முதுகம்பட்டி, பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. தொடா்ந்து ஒருமணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால், சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

மாவட்டத்தில் பென்னாகரம் - 68 மி.மீ., ஒகேனக்கல் - 10.2 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால், இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement