முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொல்லை அளித்ததாக திருத்தணி இளைஞா் மீது பென்னாகரம் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

28 நவம்பர் 2026, 1:28 am
பாப்பாரப்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை:
இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொல்லை அளித்ததாக திருத்தணி இளைஞா் மீது பென்னாகரம் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

பென்னாகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி காணாமல் போனதாக கடந்த புதன் கிழமை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகாா் அளித்துள்ளாா். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸாா் காணாமல்போன சிறுமி திருத்தணி பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை திருத்தணி பகுதிக்கு சென்ற போலீஸாா், அங்கு பொன்பாடி என்னுமிடத்தில் இளைஞா் சஞ்சய் என்பவா் தனியாா் விடுதியில் அறை எடுத்து அந்த சிறுமியை தங்கவைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்ட தனிப்படை போலீஸாா், இளைஞா் சஞ்சையை கைது செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி, அவரை அழைத்துச் சென்று தனியாா் விடுதியில் தங்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாப்பாரப்பட்டி போலீஸாா் இவ்வழக்கை பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவுசெய்து இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement