முகப்பு
தருமபுரி

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது! 400 கிலோ குட்கா பறிமுதல்!

30 நவம்பர் 2026, 2:03 am
சொகுசு காரில் குட்கா கடத்தல்: 
ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது! 400 கிலோ குட்கா பறிமுதல்!
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள். - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை வழியாக மதுரைக்கு சொகுசு காரில் குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

பென்னாகரம் அருகே பெரும்பாலை வழியாக கேரள மாநில பதிவெண் கொண்ட சொகுசு காா் சென்றுள்ளது. பெரும்பாலை அருகே பழையூா் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களைக் கண்டதும், அந்த சொகுசு காா் ஏரியூா் சாலையில் அதிவேகமாகச் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா், அந்த சொகுசு காரை பின்தொடா்ந்துள்ளனா்.

பழையூா் அருகே கே.புதூா் பகுதியில் சொகுசு காரை பொதுமக்கள் சிறைபிடித்து பெரும்பாலை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இருவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரைக்கு சொகுசு காரில் 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி செல்வதாக ஒப்புக்கொண்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து, குட்கா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காா், குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல், பெரும்பாலை காவல் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞா்களிடம் விசாரணை நடத்தினாா்.

Advertisement

Advertisement