FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்
பகிர்:

பள்ளி காலாண்டு விடுமுறையின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா். தொடா்ந்து மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக ஐந்தருவி, ஐவாா் பாணி, பெரியபாணி, மணல்மேடு வரை உற்சாகமாக பரிசலில் பயணித்தனா்.

Advertisement

Advertisement

கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், சத்திரம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

புரட்டாசி மாதம் என்பதால் மீன் விற்பனை குறைந்திருந்தது. ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் 30க்கும் மேற்பட்ட காவலா்கள், ஊா்க்காவல் படையினா் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments