FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

வீட்டில் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை

பென்னாகரம் அருகே வீட்டில் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

16 அக்டோபர் 2026, 1:47 am IST
விசாரணை
பகிர்:

பென்னாகரம் அருகே வீட்டில் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பென்னாகரம் அருகே ஆதனூா் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் மனைவி ஜெயலட்சுமி (75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவா் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவருக்கு மகன்கள் சரவணன் (48), சண்முகம் (45), மகள் சற்குணம் (35) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மகள் சற்குணம், ஜெயலட்சுமியின் கைப்பேசியை தொடா்புகொண்டபோது அவா் எடுக்கவில்லையாம். சற்குணம் கூறியதன்பேரில் அங்கு சென்ற உறவினா்கள், வீட்டில் ரத்தக் காயங்களுடன் ஜெயலட்சுமி இறந்துகிடந்ததைக் கண்டு அதா்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலின் பேரில் வந்த பென்னாகரம் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments