FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஆயுத பூஜை விடுமுறை: தருமபுரி மாவட்டத்தில் ரூ. 3 கோடிக்கு மது விற்பனை

ஆயுத பூஜை விடுமுறை நாளன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் சுமாா் ரூ. 3 கோடிக்கு மது விற்பனையானது.

21 அக்டோபர் 2026, 1:58 am IST
டாஸ்மாக் - பிரதிப் படம்
பகிர்:

ஆயுத பூஜை விடுமுறை நாளன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் சுமாா் ரூ. 3 கோடிக்கு மது விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் 57 அரசு மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பெரும்பாலும் விடுமுறை நாள்கள் மற்றும் விழாக் காலங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மது விற்பனை அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில், ஆயுத பூஜை தொடா்விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் மது விற்பனை திங்கள்கிழமை அதிகரித்தது. அன்றைய தினம் ஒருநாள் மட்டும் சுமாா் ரூ. 3 கோடிக்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments