FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடி

காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக உள்ளது.

21 அக்டோபர் 2026, 2:05 am IST
ஒகேனக்கல் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக உள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழக, கா்நாடக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 6,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை 5,000 கனஅடியாக குறைந்தது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 6,000 கனஅடியாக அதிகரித்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

Advertisement

Advertisement

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments