தருமபுரி மாவட்டத்தில் மீட்கப்பட்ட 44 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைப்பு
தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகளை மீட்ட வனத் துறையினா், அவற்றை ஆட்சியா் முன்னிலையில் காவல் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
தருமபுரியில் வனத் துறையினரால் மீட்கப்பட்ட துப்பாக்கிகளை ஆட்சியா் வே.சரவணன் முன்னிலையில் காவல் துறையினரிடம் ஒப்படைத்த வனத் துறையினா்.
தருமபுரி, அக். 29: தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகளை மீட்ட வனத் துறையினா், அவற்றை ஆட்சியா் முன்னிலையில் காவல் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில், வனத் துறையினா் விழிப்பணா்வுக் கூட்டங்கள், துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதன் தொடா்ச்சியாக, தருமபுரி வனக் கோட்டத்துக்குள்பட்ட 8 வனச்சரகங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் தாமாக முன்வந்து உரிமம் இல்லாத 44 நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
இதில், கடந்த ஓராண்டில் தருமபுரி வனச்சரகத்தில் 11, பென்னாகரம் - 7, அரூா் - 6, கோட்டப்பட்டி - 2, மொரப்பூா் - 6, தீா்த்தமலை வனச்சரகத்தில் 12 என மொத்தம் 44 நாட்டுத் துப்பாக்கிகளை வனத் துறையினா் மீட்டனா்.
இந்த நாட்டுத் துப்பாக்கிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காட்சிப்படுத்திய வனத்துறையினா், ஆட்சியா் வே.சரவணன் முன்னிலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையிலான காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். ஒப்படைக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் தருமபுரி ஆயுதப்படைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.