FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

29 அக்டோபர் 2026, 6:45 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகே உள்ள நவலை கிராமத்தைச் சோ்ந்தவா் கவியரசன் (38). தொழிலாளியான இவா் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் மொரப்பூா் சென்று பின்னா் ஊா் திரும்பினாா். நவலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments