அரசுப் பள்ளி மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு
தில்லியில் நடைபெற உள்ள தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ள அரசுப் பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பாராட்டினார்.
தில்லியில் நடைபெற உள்ள தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ள அரசுப் பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் பர்கூர் ஒன்றியம், நல்லப்பநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் மெய்யரசு சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் தானியங்கி நீர்ப்பாசன கருவி வடிவமைப்பை காட்சிக்கு வைத்திருந்தார். இதில் மாணவர் மெய்யரசு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதைத் தொடர்ந்து திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் தங்கப் பதக்கம் பெற்று தேசிய அறிவியல் கண்காட்சிக்கு தகுதி பெற்றார்.
தில்லியில் அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கண்காட்சியில் பங்கேற்க உள்ள மாணவர் மெய்யரசுவை, மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பாராட்டினார், அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.