FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கர்நாடகத்துக்கு மணல் கடத்தியதாக இருவர் கைது

ஒசூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

ஒசூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்திச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், இருவரை கைது செய்தனர்.

ஒசூர் அடுத்த மத்திகிரி காவல் நிலையப் போலீஸார் தமிழக எல்லையான கொத்தஜூகூர் பிரிவு சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு லாரிகளை நிறுத்திச் சோதனை செய்தபோது, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார் தேன்கனிக்கோட்டை தேவநத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (38), லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments