நிலத் தகராறு: ராணுவ வீரர் உள்பட இருவர் கைது
மத்தூர் அருகே, நிலத்தகராறால் ஏற்பட்ட மோதலில் முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கியதாக ராணுவ வீரர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மத்தூர் அருகே, நிலத்தகராறால் ஏற்பட்ட மோதலில் முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கியதாக ராணுவ வீரர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மத்தூர் அருகே, ஜிஞ்சம்பட்டியைச் சேர்ந்த சின்னப்பா மகன்கள் வெங்கசடேசன் (38) முன்னாள் ராணுவ வீரர். இவரது மூத்த சகோதரர் சரவணன் (40). இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் மகன்கள் கிருஷ்ணகுமார் (30), இவரது இளைய சகோதரர் குபேந்திரன் (26) ராணுவ வீரர். இவர்களுக்கும் இடையே நிலத் தகராறால் முன் விரோதம் இருந்ததாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவர்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனராம். இதில், கிருஷ்ணகுமாரும் அவரது சகோதரர் குபேந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனையும் அவரது சகோதரர் சரவணனையும் தடியால் தாக்கினராம். இதில், தலையில் படுகாயமடைந்த இருவரும் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின்னர், தீவிர சிகிச்சைக்காக இருவரும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மத்தூர் காவல் நிலையத்தில் சரவணன் ஞாயிற்றுக்கிமை புகார் அளித்தார். இதன்படி, உதவி காவல் ஆய்வாளர் வீரமணி ராணுவ வீரர் குபேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தார். பின்னர், இருவரும் போச்சம்பள்ளி குற்றவியல் நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.