FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்புப் பெற முன்பணம் செலுத்திய விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்புப் பெற முன்பணம் செலுத்திய விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் அதன் தலைவர் ப.கி.பட்டாபிராமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் எ.கே.ஆசைத்தம்பி, பா.கணேசன், பி.ரவி, ஜி.எம்.ராணா, டி.கே.குணசேகரன், எஸ்.சுப்பிரமணியம், வி.எம்.சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவசாயக் கிணறுகளுக்கு மின் இணைப்புப் பெற முன்பணம் செலுத்தி விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத் தொழிலுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தொடங்கப்பட உள்ள தொழில்சாலைகளுக்கு அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளைத் கட்டித் தர வேண்டும்.

60 வயது நிறைவடைந்த விவசாயிகள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments