FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிருஷ்ணகிரியில் கருணாநிதிக்கு மௌன அஞ்சலி

கிருஷ்ணகிரி நகரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி நகரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தானது படிப்படியாகக் குறைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் புறநகர் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு நகர திமுக சார்பில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதா நவாப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தர்மன், நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மௌன ஊர்வலம்: கிருஷ்ணகிரி வட்டச் சாலையிலிருந்து பெங்களூரு சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை வரையில் திமுகவினர் மாவட்ட துணைச் செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் மௌன ஊர்வலம் சென்றனர்.
அனைத்து வியாபாரிகள் சங்கம், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கேசவன் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. பெங்களூரு சாலை, வட்டச் சாலை, சேலம் சாலை வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது.  
இதைபோல், கிருஷ்ணகிரி மாவட்ட நான்கு சக்கர வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சங்கம், கிருஷ்ணகிரி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், மாநில இணைச் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் அசோக்குமார் ராவ் தலைமையில் கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை அருகே கருணாநிதியின் உருவப்படத்துக்கு பொதுமக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருணாநிதியின் மரணத்தை அடுத்து, கிருஷ்ணகிரி நகரானது வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்கள் இயங்கவில்லை. அனைத்து திரையரங்குகள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சுங்க வசூல் மையமானது போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments