அடிப்படை வசதிக்காக காத்திருக்கும் மலைவாழ் மக்கள்
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 17-ஆவது வார்டு இருளர் காலனியில் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 17-ஆவது வார்டு இருளர் காலனியில் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
ஜந்நூறுக்கும் மேற்பட்டோர் மலைவாழ் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்றாட பிழைப்புக்காக காடுகளுக்குச் சென்று தேன் எடுத்தல், ஆடு மேய்த்தல், மூலிகை கிழங்கு எடுத்தல் மற்றும் விறகு எடுத்தல் போன்றவற்றையே தனது
பாரம்பரியத் தொழிலாக மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பென்னாகரத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர் வனப் பகுதியான சின்னாறு முத்தூர்பட்டியில் வசித்து வந்தனர். அப்போதைய பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நஞ்சப்பன், வனப் பகுதியில் இருந்தவர்களை அழைத்து வந்து பென்னாகரம் போடூர் பகுதியில் தங்க வைத்தார்.
பின்னர் அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தமிழக அரசு சார்பில் 46 வீடுகள் கட்டப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த வீடுகள் கட்டப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் உள்ளதால், வீடுகள், கழிவுநீர்க் கால்வாய், சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.இப் பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிப்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தபோது சேதமடைந்த வீடுகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று கூறினர்.
இதற்கிடையே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்காக ஜல்லி கற்கள் பெயர்க்கப்பட்டு ஒரு மாதமாகியும் புதிய சாலை போடப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து,சேதமடைந்த வீடுகள், சாலைகள், சாக்கடை கால்வாய், குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.