FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 5 சிறப்பு சிகிச்சை மையங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.72 லட்சத்தில் 5 சிறப்பு சிகிச்சை மையங்களை இளைஞர் நலன்

Updated On : 31 டிசம்பர் 2018, 8:29 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.72 லட்சத்தில் 5 சிறப்பு சிகிச்சை மையங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்
சு.பிரபாகர் தலைமை வகித்தார். சிறப்பு சிகிச்சை மையங்களைத் திறந்துவைத்து அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பேசியது:
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில், ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் கொண்ட அவசரச் சிகிச்சை பிரிவு, ரூ.15 லட்சம் மதிப்பில் வலி நிவாரண மையம், ரூ.12 லட்சம் மதிப்பில் முதியோர் பிரிவு மையம், ரூ.10 லட்சம் மதிப்பில் மார்ப்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு மையம், ரூ.25 லட்சம் மதிப்பில் புற்று நோய் சிறப்பு மையம் என மொத்தம் ரூ.72 லட்சத்தில் 5 வகையான சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 
இந்த மையங்கள் மூலம் உள்புற நோயாளிகள், வெளிபுற நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு இணையான சிறப்பான சிகிச்சையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். 
எம்எல்ஏ-க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், நலப்பணிகளின் இணை இயக்குநர் அசோக்குமார், தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பரமசிவம், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments