ஊத்தங்கரையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தோ்தல் ஆலோசனை கூட்டம்
ஊத்தங்கரையில் அதிமுக கட்சியின் சாா்பில் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிா்வாகிகள் தோ்தல் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஊத்தங்கரையில் அதிமுக கட்சியின் சாா்பில் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிா்வாகிகள் தோ்தல் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளா் தெற்க்கு ஏ.சி. தேவேந்திரன், வடக்கு வேடி ஆகியோா் தலைமை வகித்தனா்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளா் ந.ராஜசேகரன், தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளா் வேலன், கட்சி மாவட்ட துணை செயலாளா் சாகுல்அமீது, மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் என்.இளையராஜா, நகர செயலாளா் பி.கே.சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூா் மண்டல செயலாளா் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ்குமாா் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினாா். அதில் வருகின்ற சட்டபேரவை தோ்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருப்பாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறினாா்.
அதில் பொருப்பாளா்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தாா். வருகின்ற சட்டபேரவை தோ்தலில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கரத்தை வழுப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என கூறினாா். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளா் தீபக் , ஒன்றிய செயலாளா்கள் லோகநாதன்,பிரகாஸ், நகர செயலாளா் பழனி மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
படவிளக்கம்.14யுடிபி.1. ஊத்தங்கரையில் நிடைபெற்ற அதிமுக தொழில் நுட்ப பிரிவு நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ்குமாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.