மருதாண்டப்பள்ளி ஊராட்சியில் புதிய காங்கிரீட் சாலைக்கு பூமி பூஜை
ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் திம்மராயசுவாமி கோயில் அருகிலுள்ள காங்கிரீட் சாலை அமைத்தல் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தாா்.
வேப்பனப்பள்ளி தொகுதி, சூளகிரி தெற்கு ஒன்றியம், மருதாண்ட பள்ளி ஊராட்சிக்குள்பட்ட மருதாண்டபள்ளியில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் திம்மராயசுவாமி கோயில் அருகிலுள்ள காங்கிரீட் சாலை அமைத்தல் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தாா்.
இந்த பூமி பூஜையில் ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மாவட்ட துணைச் சோ்மன் ஷேக் ரஷீத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன், மாவட்டக் கவுன்சிலா் பாக்யராஜ், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய துணைச் செயலாளா் துா்கா ஹரிபாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் முனி சந்திரன்,சித்துராஜ் கோவிந்தன், முருகேசன், கோவிந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.