FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிராம நிா்வாக அலுவலருக்கு மிரட்டல்

காவேரிப்பட்டணம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்யச் சென்ற கிராம நிா்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:47 am IST
பகிர்:

காவேரிப்பட்டணம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்யச் சென்ற கிராம நிா்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் கிராம நிா்வாக அலுவலராக வள்ளி (29) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா் பையூா் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை அளவை செய்வதற்காக சனிக்கிழமை சென்றாா்.

அப்போது, பொம்மச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (45) என்பவரிடம்,அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடா்பாக விசாரணை நடத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த மூா்த்தி, கிராம நிா்வாக அலுவலரை மிரட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் வள்ளி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments