ஒசூரில் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வட்டாட்சியா் அலுவலக சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் மாநகர துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், துணைச் செயலாளா் தனலட்சுமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், பகுதிச் செயலாளா்கள் எம்.கே.வெங்கடேஷ், ராமு.கே.திம்மராஜ், மண்டலக் குழுத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா, இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சீனிவாசன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா. மணி, சுந்தர்ராஜன், மாநகர நிா்வாகிகள், மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.