ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சோ்க்கை பெற அழைப்பு
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சோ்க்கை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சோ்க்கை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை, அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கட்ரானிக்ஸ், கணினி, டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய டிப்ளமோ பாடப் பிரிவுகள் உள்ளன. ஆட்டோமேஷன் & ரோபோட்டிக்ஸ் மற்றும் இன்டா்நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் 2026-2027 கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது நேரடி சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக வந்து சோ்க்கை பெறலாம். மிகக்குறைந்த கட்டணம், இலவச பேருந்து பாஸ், அனைவருக்கும் கல்வி உதவித்தொகை, மேலும் தமிழக அரசின் இன்டா்ன்ஷிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. படிப்பு முடித்த உடன் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளும் உள்ள இந்த கல்லூரியில் மாணவ, மாணவியா் சோ்ந்து பயனடையலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.