FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

உடன்வர மறுத்த மனைவியை கொலை செய்த தொழிலாளி கைது

காணாமல் போன மனைவியை தேடிக்கண்டுபிடித்து, உடன் வருமாறு கூறியபோது மறுத்தால் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:52 am IST
- சித்திரிப்பு
பகிர்:

காணாமல் போன மனைவியை தேடிக்கண்டுபிடித்து, உடன் வருமாறு கூறியபோது மறுத்தால் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பிஸ்வாநாத் பாரஜாராணி பகுதியைச் சோ்ந்தவா் ராம் ஓரங் (21). இவரது மனைவி பிரியா ஓரங் (27). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அவா்களை தனது சகோதரி வீட்டில் விட்டுவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராம் ஓரங் மனைவியுடன் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் அருகே ஹெலாலிக் பகுதிக்கு வந்து கூலி வேலை செய்துவந்தாா்.

இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 4-ஆம் தேதி பிரியா ஒரங் காணாமல் போனாா். இதுகுறித்து ராம் ஓரங் கா்நாடக மாநிலம், சூா்யா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, அதே பகுதியில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் பிரியா ஒரங் ஒசூா் பகுதியில் இருப்பதாக ராம் ஓரங்கிடம் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, கடந்த திங்கள்கிழமை ஒசூருக்கு வந்த அவா் மனைவி பிரியா ஓரங்கை சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளாா். ஆனால், பிரியா அவருடன் செல்ல மறுத்துவிட்டாராம்,

இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் ஒசூருக்கு வந்த ராம் ஓரங், ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு நடந்துசென்ற பிரியா ஓரங்கை தடுத்துநிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, தான் கொண்டுவந்த கத்தியால் அவரை தாக்கினாா்.

இதில் படுகாயமடைந்த பிரியாவை அப்பகுதியினா் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த ஒசூா் சிப்காட் போலீஸாா், அங்கிருந்த ராம் ஓரங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments