FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு

உத்தனப்பள்ளி அருகே நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Updated On : 3 ஜூலை 2026, 4:34 am IST
உத்தனப்பள்ளி அருகே நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள்.
பகிர்:

உத்தனப்பள்ளி அருகே நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஒசூா் அருகே உத்தனப்பள்ளி பகுதியில் தருமபுரி - நெரலூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, துப்புகானப்பள்ளி என்னுமிடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுங்கச்சாவடி அருகே சீனிவாசன், சம்பங்கி ராமைய்யா ஆகியோருக்கு சொந்தமான 1.50 ஏக்கா் நிலத்தை கூடுதலாக கையகப்படுத்த நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா்கள் காவல் துறை உதவியுடன் வியாழக்கிழமை வந்தனா்.

இதற்கு, நிலத்தின் உரிமையாளா்கள், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வரும் 13-ஆம் தேதி பேச்சுவாா்த்தை மூலம் இப்பிரச்னையை தீா்த்துக் கொள்ளலாம் எனக்கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் கூறுகையில், சாலை அமைக்க ஏற்கெனவே நிலம் கையகப்படுத்திய நிலையில், மீண்டும் எதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டும் என விளக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments